விருப்பங்கள் நிறைவேறும் வாரம். சிம்ம ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் ஏக யோகாதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார்.இது பொற்காலம் என்று கூறும் வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும். தொழில் சிறப்பாக நடக்கும். எந்தக் காரியத்தையும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். வருமானத்திற்கு மீறிய கடனை தவிர்க்கவும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான பிரச்சனைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். ஆடி மாதம் புனித நீர் நிலைகளில் நீராட சுய ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகும்.
அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டிய வாரம். ராசியில் 2,9ம் அதிபதி சுக்கிரன் நீச்ச நிலையில் சஞ்சரிக்கிறார். தொழிலை மேம்படுத்த அல்லது தொழில் மாற்றம் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். ராசிக்கு 7-ல் சனி பகவான் வக்ரம் அடைவதால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்க ளிலும், சட்டத்திற்கு புறம்பான விசயங்களிலும் ஆர்வம் குறைப்பது நல்லது. நீண்ட நெடு நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆடி வெள்ளிக் கிழமை விரதம் இருந்து கன்னி தெய்வங்களை வழிபடவும்.
மனதில் தன்னம்பிக்கை தைரியம் குடிபுகும். ராசிக்கு 6ல் சனி வக்ரம் அடைவதால் நம்மால் சாதிக்க முடியும் என்ற மனநிலை உருவாகும்.கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். யாரைப் பற்றி யும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர்கா லத்தை மட்டுமே மனதில் கொண்டு பயணிப்பீர்கள். உங்களின் வாழ்நாள் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும். தொழில் ரீதியான சகல நன்மைகளும் தேடி வரும். கலைத்துறையினர் அழகு ஆடம்பரப் பொருள் விற்பனையாளர்கள் அதிக நற்பலன் பெறுவார்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாட்டை தொடரும் சந்தர்ப்பம் அமையும். இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். திருமணத் தடை விலகும். கலைத்துறை யினரின் திறமை மிளிரும். இதுவரை இருந்த நோய் தாக்கம் குறைய துவங்கும். ஆடி மாத நாக சதுர்த்தியன்று மல்லிகை மாலை அணிவித்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.
புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம்.ராசிக்கு உச்ச குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து நன்மையையும் பாக்கிய ஸ்தான குரு உங்களுக்கு வழங்குவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பும் அமோகமாக அமைய குருபகவான் ஆசி புரிவார். தற்போது குரு பகவான் உங்களை புனிதப்படுத்த போகிறார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் தீராத தீர்க்க முடியாத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி கைகூடும். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பணவரவு பல வழிகளில் மிகுதியாக இருக்கும். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். பிராயணங்களால் ஆதாயம் உண்டு. கருட பஞ்சமி அன்று விரதம் இருந்து பால் அபிஷேகம் செய்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.