வழிபாடு

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

வேலையில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும்

சிம்மம்

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசியில் கேது பகவான் சஞ்சரிக்கிறார். 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் குரு புதன் சூரியன் சேர்க்கை உள்ளது. அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.வேலையில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். ரியல் எஸ்டேட், பங்குச் சந்தையில், கல்வி நிறுவனங்கள் துவங்குவது போன்றவற்றில் அதிக முதலீடு செய்வீர்கள். சிலர் வாரிசுகளை அரசியலில் நுழைக்க ஆர்வப்படலாம். ஆடி மாதத்தில் பெண் காவல் தெய்வங்களுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.

கன்னி

திட்டங்கள் லட்சியங்கள் நிறைவேறும் வாரம்.ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு பார்வை உள்ளது.பல நாள் கனவுகள் லட்சியங்களை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். வாழ்க்கை நகர்த்துவதில் நிலவிய அனைத்து விதமான தடை, தாமதங்கள் விலகும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். அதிக நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும் கௌரவம் அந்தஸ்து உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும்.எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். சுப நிகழ்வுகள் நடைபெறும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் மேம்படும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கி ஆசி பெறுவது நல்லது.

துலாம்

மனதில் நிம்மதி கூடும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை மன பாரம் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். கவலைகள் கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாது. புதுப்பொலிவுடன் மங்களகரமாக இருப்பீர்கள்.வாழ்வில் தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும்.நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.அடமானத்தில் உள்ள சொத்துக்கள் மீண்டு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு அவசியம். வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.நோய் நொடி நீங்கும். சுப நிகழ்வுகள் , ஆடம்பர விருந்துகள் , ஆடம்பர உணவு விடுதிக்கு செல்லுதல் போன்ற பொழுபோக்கு இடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை மகிழ்ச்சி யாக கழிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து பித்ருக்களை வழிபடவும்.

விருச்சிகம்

எதிலும் தனித்து இயங்கும் வாரம். ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு சேர்க்கை உள்ளது.செயலாற்றல் அதிகரித்து வாழ்வில் மறக்க முடியாத நல்ல மாற்றங்களை தரப்போவது நிச்சயம். செல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். கற்பனை சக்தி, சாத்வீக குணம்,எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். நினைத்தது நிறைவேறும். பொறுமையின் மறு உருவமான நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தக்க வைக்க அதிக முயற்சியும் செய்ய வேண்டும். உயர்குலத்தவராலும் ஒரு , உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். 11.8.2026 அன்று அதிகாலை 4.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பதால் பிறரின் மனம் நோகும் படியான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். ஆடி அமா வாசையன்று உணவு உடை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406