வழிபாடு

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும்.

சிம்மம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். வார இறுதி வரை ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. நன்மைகள் மிகுதியாக நடக்கும். சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள், உதவாக்கரைப் பிள்ளைகள் திருந்துவார்கள். புதிய கூட்டுத் தொழிலில் முதலீடு செய்ய சரியான காலகட்டத்தை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொள்வது நல்லது. குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். சிலர் வீட்டிற்கு வர்ணம் பூசி புதுப்பிப்பார்கள். சொந்த வீடு, வாகனம் என வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும். மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். 2.8.2026 அன்று பகல் 3.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். ஏதாவது காரணத்தால் கடனாகி மன வேதனைப்படலாம் என்பதால் கவனம் தேவை. ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்க முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதுவரை தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. தொழிலுக்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாங்கிய கடனை செலுத்தக்கூடிய விதத்தில் வருமானம் அதிகரிக்கும். ஒருவரின் வருமானத்தில் நடந்த குடும்பம் தற்போது குடும்ப உறுப்பினர்களின் உபரி வருமானத்துடன் நடக்கும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் ஆதரவு நிம்மதி தரும். புதிய எதிர் பாலின நட்பு கிடைக்கும். கை மறதியாக வைத்த நகை, பொருள், முக்கிய ஆவணங்கள் தென்படும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை கன்னிப் பெண்களுக்கு மங்களப்பொருட்கள் தானம் வழங்கவும்.

துலாம்

நிதானம் தேவை. ராசி அதிபதி சுக்ரன் கேதுவுடன் சேர்வதும் நீச்சம் அடைவதும் சற்று சுமாரான பலனையே ஏற்படுத்தும் அமைப்பாகும். மேலும் 10ல் குருவரும் காலங்களில் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழ மொழியாகும். கோட்ச்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் நிலைமைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதால் வாழ்க்கை பயணத்தை இலகுவாக்க முடியும். திருமணம் மற்றும் சுபகாரிய முயற்சியில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக பற்று உண்டாகும். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். அலைக்கழித்த வம்பு வழக்கிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து வழிபடவும்.

விருச்சிகம்

மனச் சங்கடங்கள் அகலும் வாரம். ராசிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வையும் குருவின் ஐந்தாம் பார்வையும் உள்ளது. இது குரு மங்கள யோகத்திற்கு இணையான பலன்களை வழங்கும் அமைப்பாகும். புதிய வாகனங்கள் சொத்துக்கள் வாங்கும் முயற்சி கை கூடும். சொத்துக்களின் மதிப்பு ஏறும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். நெருக்கடிகள் தடை, தாமதங்கள் விலகும். தொழில், உத்தி யோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சனைகளும் கானல் நீராக மறையும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை முடிவுக்கு வரும். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். தாய் வழிச் சொத்தில் இருந்த குழப்பங்கள் தாய்மாமா மற்றும் நண்பர்கள் உதவியுடன் முடிவுக்கு வரும். ஆடி வெள்ளிக்கி ழமை குங்கும அர்ச்சனை செய்த அம்மன் வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406