முன்னேற்றம் உண்டாகும் மாதம். ராசி அதிபதி சூரியன் ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற 6, 9 ம் அதிபதி குருடன் சேர்க்கை பெறுகிறார். பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். கடன் நோய் எதிரி சார்ந்த பிரச்சினைகள் குறையும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நிலவி வந்த சில பிரச்சினைகள் உயரதிகாரியின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால் சீராகும். நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்ப உறவுகளின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடவும்.
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரகதியில் நின்றாலும் ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் குரு சேர்க்கை இருப்பது கன்னி ராசியினருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். வாரத்தின் முற்பகுதியில் சற்று சாதகமான பலன்கள் நடக்கும். பிற்பகுதியில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டியது உங்களது கடமையாகும். அலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். குடும்பத்தில் எல்லா விசயங்களை யும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உரு வாகும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதி கரிக்கும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவார். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் விரய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். புதன் வக்ர நிவர்த்தி அடையும் வரை சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம் படிக்கவும்.
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். ராசி அதிபதி சுக்ரன் செவ்வாயின் பார்வையில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். சங்கடம் நீங்கும். குடும்ப உறவுகள் மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்கள். புதிய வேலை முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக குறுகிய காலத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். தொழிலில் இருந்த மந்த நிலைமாறி சூடு பிடிக்கும். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். 12.7.2026 அன்று இரவு 7.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சில சமயங்களில் சுய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலி பெண்களுக்கு, மங்களப் பொருள்கள் தானம் வழங்கவும்.
எடுத்த காரியத்தில் கண்ணும், கருத்துமாய் செயல்படுவீர்கள். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவும், தன்னைத்தானே உணரும் சக்தியும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும்.கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. இது வரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் பேசி முடிக்கலாம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 12.7.2026 அன்று இரவு 7.06 மணி முதல் 14.7.2026 அன்று இரவு 6.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது. ஆடி மாத பிறப்பன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.