அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசியில் குரு கேது செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனியின் பாதிப்பு குறையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு காலதாமதத் திருமணம் நல்லது. கணவரின் அன்பளிப்பான அசையாச் சொத்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். சஷ்டி விரதம் இருந்து பஞ்சகவ்யம் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கிறார். பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும். தன வரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கோபத்தை குறைத்து ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். மறு திருமண முயற்சி கைகூடும். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் மறைவு ஸ்தானங்களை வலிமைப்படுத்துகிறது. வீண் விரயங்கள், இழப்புகள், மருத்துவமனை செலவுகள் வரலாம். சஷ்டி விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபடவும்.
ஆதாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகத்தில் இருக்கிறார். எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். இழந்த பதவி தேடி வரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். காழ்புணர்ச்சியால் தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார்கள். சஷ்டி விரதம் இருந்து பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும் வாரம். பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குரு கேது செவ்வாய் சேர்க்கை உள்ளது. தடை தாமதங்கள் அகலும். முயற்சிகள் வெற்றியாகும். தொழில் வளர்ச்சி மன நிறைவு தரும். டிராவல்ஸ், குளிர்பான விற்பனை, உணவுத் தொழில் மிகுந்த லாபம் பெற்றுத் தரும். தொழில் போட்டிகள் குறையும். உத்தியோக அனுகூலம் உண்டு. புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். ராஜ யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். தடைபட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உயில் எழுதுவதற்கு உகுந்த காலம். இதுவரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.திருமண முயற்சி சாதக மாகும். சஷ்டி விரதம் கடைபிடித்து மஞ்சள் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.