வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். வீர தீரச் செயல்களால் புகழ் பெறுவீர்கள். ஆன்மீக இயக்கங்கள், தொண்டு நிறுவனத்திற்கு சேவை செய்வதிலும் நாட்டம் மிகும். வேற்று மத போதனைகள் கேட்பதில் ஆர்வம் உண்டாகும். சிலர் வேறு மதத்திற்கும் மாறலாம். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். அரசின் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். வார முற்பகுதியில் சில சங்கடங்கள் தோன்றினாலும் பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஏதேனும் சங்கடங்கள் வந்தாலும் சமாளிக்கக்கூடிய தைரியமும் சூழ்நிலையும் உண்டாகும். கற்ற கல்வி பலன் தரும். இடமாற்றமும் பதவி உயர்வும் வந்து சேரும். எந்த புதிய முயற்சிகளையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருந்தால் கிரகங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சிவ வழிபாடு இன்னல்களை தீர்க்கும்.
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெறுகிறார் இதற்கு சனி மற்றும் செவ்வாய் பார்வை உள்ளது. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எனினும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் மலை போல் வந்த துயரம் பனி போல விலகும். சுய உழைப்பினால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் உயர்வதால் வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். உபரி லாபத்தை அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பது முக்கியம். அல்லது வீடு வாகனம் என சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது. சந்தோஷத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட துயரத்தில் கிடைக்கும் அனுபவத்திற்கு பலம் அதிகம். தேவையற்ற வார்த்தைகளை வாக்குவாதங்களை குறைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும். ஸ்ரீரங்கம் சென்று வர லட்சுமி கடாட்சம் அதிகமாகும்.
செல்வாக்கு அந்தஸ்து உயரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். உங்களின் தனித்திறமையால் குடும்பத்தை உயர்த்துவீர்கள். முன்னேற்ற பாதை தென்படும். புதுப்பொலிவு உண்டாகும். இதுவரை கடனால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிது சிறிதாக குறைய துவங்கும். உயர்வுகள் உண்டாகும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலையில் இருந்து மீள்வீர்கள். உடலில் இருந்த நோய்கள் நீங்கும் மன சஞ்சலங்கள் கவலைகள் கஷ்டங்கள் நீங்கி புதிய தெம்பு பிறக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடங்கள் அகலும். பூர்வீகச் சொத்துக்களில் நிலவிய சங்கடங்கள் விலகும். உங்கள் பங்குச் சொத்து முறையாக வந்து சேரும். மனதில் நினைத்ததை செயல்படுத்தக் கூடிய வகையில் சொல்வாக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் இணைந்து படிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். பத்தில் குரு வரும் காலத்தில் பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகன் மருமகள் வரும் நேரம் இது. சந்தர்ப்பம் அமையும் போது காஞ்சி காமாட்சியை வழிபட நிலையான செல்வாக்கு உண்டாகும்.
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. புதிய தெளிவு பிறக்கும். அறிவாற்றல் மேம்படும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டமகுரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். புதிய தொழில் எண்ணங்கள் உருவாகும். அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். சில நேரங்களில் விரய செலவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவில் வருவாயும் இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். சொந்த வீடு, வாகனம், அழகு ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமயமாக மாறும். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். 7.9.2026 அன்று பகல் 12.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்படுத்த வளமான எதிர்காலம் உண்டு. விருச்சக ராசியினர் திருச்செந்தூர் முருகனை வழிபட நிலையான முன்னேற்றங்கள் உண்டாகும்.