வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

மேஷம்

முன்னேற்றமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி செவ்வாய் வெற்றி ஸ்தானத்திற்கு சென்று புதனுடன் சேர்க்கை பெறுகிறார். வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லும். வேதனைகளும் சோதனைகளும் சாதனைகளாக மாறும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும். சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரப்போகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். கண் தொடர்பான அறுவை சிகிச்சை வெற்றி தரும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். திருமண முயற்சி தாய்மாமாவின் ஆதரவால் சித்திக்கும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். புதிய சொத்துக்கள் கிடைக்கும். மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

சுப விரயங்கள் அதிகமாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைகிறார். இதற்கு சனி பகவானின் சமசப்தம பார்வை உள்ளது. செலவிற்கேற்ற வரவும் வரும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். வெளிநாடு, வெளிமாநில பயணம் சிறப்பாகும், வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும். சாதரணமானவர்களும் சாமானியர்களாக மாறப்போகும் வாரம். பாஸ்போர்ட், விசா, குடியுரிமை தொடர்பான சர்ச்சைகள் அகலும். தந்தையால் ஏற்பட்ட உபத்திரவம் குறையும். முன்னோர் சொத்திற்காக நீதி மன்றப்படி ஏறியவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும் அல்லது வழக்குகள் தள்ளிப்போகும். 28.7.2026 அன்று இரவு 7.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. அனைவரிடமும் கனிவுடன் நடந்து கொள்ளவது அவசியம். ஆடி வெள்ளிக்கி ழமை அம்மனுக்கு துள்ளுமாவு படைத்து வழிபடவும்.

மிதுனம்

நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து ராசியில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். துன்பமும், துயரமும் தீரும். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் காலத்திற்கும் நிலைக்கும் அழியாப் புகழ் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து கவுரவும் உயரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். புத்தி சாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். வீடு, வாகன, யோகம் உண்டாகும். சீட்டுக் கட்டி இழந்த பணம், ஜாமீன் போட்டு ஏமாந்த பணம் கிடைத்து விடும். சுப கிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். சுகமான ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற கடன் உருவாகலாம். 28.7.2026 அன்று இரவு 7.49 மணி முதல் 31.7.2026 அன்று காலை 6.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் பய உணர்வும், இயலாமையும் வெளிப்படும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடவும்.

கடகம்

மறைமுக வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். இதுவரை தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. தொழிலுக்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உங்களின் வாழ்வாதாரம் உயரும். சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். அரசு பணிக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வீண் அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. 31.7.2026 அன்று காலை 6.38 மணி முதல் 2.8.2026 பகல் 3.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்திக்கும் திறன் குறையும். மன சஞ்சலத்தை அதிகப்படுத்தும் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406