வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம்.

மேஷம்

நினைப்பதெல்லாம் நடைபெறும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது குரு மங்கள யோக அமைப்பாகும். சுக ஸ்தானத்திற்குள் கேதுவும் தொழில் ஸ்தானத்திற்குள் ராகுவும் நுழைந்து விட்டார்கள். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. தொழிலில் உங்களை கவிழ்க்க நண்பர்களாக நல்லவர்களாக நடித்தவர்கள் ஏமாறுவார்கள். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம். தெய்வபக்தி கூடும். இதுவரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். சிவ வழிபாட்டால் மேன்மையான பலன்களை பெற முடியும்.

ரிஷபம்

சாதகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் 6ம்மிடத்தில் 2, 5ம் அதிபதி புதனுடன் சஞ்சரிக்கிறார். புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும்.கமிஷன் அடிப்படையில் தொழிலில் அதிகப்படியான நன்மைகள் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயர நேரும். இடப் பெயர்ச்சியால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்துக்களின் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். உயர் அதிகரிகளிடம் நிலவிய இணக்கமற்ற சூழல் மன உளைச்சல் தீரும். தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். ஆதாயத்திற்காக பழகியவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவியுடன் வீட்டில் நல்ல சுபகாரியம் நடக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். அதற்கான கடன் தொகையும் கிடைக்கும். தாய்மாமனுடன் கருத்து வேறுபாடு வரலாம். மாலை நேரத்தில் லஷ்மி நரசிம்மரை வழிபடவும்.

மிதுனம்

காரியத்தடைகள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பஞ்சம ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றுள்ளார். பஞ்சங்கள் தீரும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும். சேமிப்பு உயரும் குடும்பத்துடன் இன்பமாக மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பிரகாசமான எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள்.அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள். வியாபாரம் வெற்றி நடை போடும். தொழிலுக்கான கூடுதல் முதலீடைத் திரட்டுவீர்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வளமான எதிர்காலத்திற்கு வழி பிறக்கும். மகிழ்ச்சிகரமான நல்ல சம்பவங்கள் நடக்கும். பிள்ளைகள் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சீராகும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் ஏற்படும். உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத் தொல்லைகள் குறையும். மகாவிஷ்ணு கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வருவதால் கவலைகள் கஷ்டங்கள் அகலும்.

கடகம்

தனித்திறமைகள் மிளிரும் வாரம். ராசிக்குள் கேதுவும் சம சப்தம ஸ்தானத்தில் ராகுவும் நுழைந்து விட்டார்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களை வழி நடத்தும். பொருள் வரவு திருப்தியாக இருக்கும். வாழ்க்கைப் பாதையில் நிலவிய குறுக்கீடுகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. சொத்து, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சகோதர்களால் வீண் விரயம் உண்டு. காதல் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. நெருக்கமான பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்களின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். பொது இடத்தில் புகழ் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற சிவ பெருமானுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்ய மேன்மை கிட்டும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT