தைரியம் பிறக்கும் வாரம். தைரிய ஸ்தான அதிபதி புதன் ராசியை பார்ப்பதால் மனதில் உற்சாகம் தைரியம் பிறக்கும். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லெளகீக ஆசைக்கு மனம் ஏங்கும். உங்களை சர்வ சாதாரணமாக நினைத்தவர்கள் வியக்கும் படி தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். பாராமுகமாக இருந்த உறவுகள் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். தொழில், உத்தியோகத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மருத்துவ செலவு குறையும். 13.10.2026 அன்று இரவு 7.12 மணி முதல் 16.10.2026 அன்று காலை 6.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நவராத்திரி காலங்களில் சிவப்பு நிற மலர்கள் சாற்றி அம்பிகையை வழிபடவும்.
தனவரவு தாராளமாக இருக்கும் வாரம். ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக ஸ்தான அதிபதி சூரியன் சனி பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பண வரவில் நிலவிய ஏற்ற இறக்கம் சுமூகமாகும். அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும் என்பதால் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். நினைப்பதெல்லாம் நடக்கும். திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மத்திம வயதினருக்கு மருமகன், மருமகள் பேரன், பேத்தி என புதிய உறவு கிடைக்கும். வயது முதிர்ந்தவர்கள் தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு ஓய்வு பெறுவார்கள். 16.10.2026 அன்று காலை 6.47க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நவராத்திரி காலங்களில் அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவும்.
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மதிப்பு மிக்கவர்களின் நட்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படை தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம். கருத்து வேறுபாட்டால் தடைபட்ட முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பிரிக்கப்படலாம். சிலருக்கு சுபவிரயமாக சொத்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சு வார்த்தையில் சுமூகமாகலாம். வாழ்வில் செட்டில் ஆகுவதற்கு தேவையான நல்ல வழிகள் தென்படும். விரயத்தை வீடு, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் திருமணச் செலவு, நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என சுப விரயமாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனம். சிலர் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கப் பெற்று இடம் பெயரலாம். நவராத்திரி காலங்களில் மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து அம்பிகை வழிபாடு செய்யவும்.
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானம் செல்கிறார். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ராசியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சிலர் குறுக்குவழி வருமானத்திற்காக உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். நிம்மதியான தூக்கம் இருக்காது. கோப உணர்வு மிகுதியாகும். எல்லாரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது. இதனால் சிலருக்கு திருமணத் தடை வரலாம். விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது. கோட்சார கிரகங்கள் முன்னுக்கு பின் முரணான பலன்களை வழங்கும் வாய்ப்பு உள்ளதால் இறை நம்பிக்கை மிக அவசியம். நவராத்திரி காலங்களில் தயிர் சாதம் தானம் வழங்கவும்.