மனக்கவலைகள் அகலும் வாரம். ராசிக்கு புதன் மற்றும் சுக்ரனின் பார்வை உள்ளதால் சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உள்ளது. வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரம், பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும். தாராள பணவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும். எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். வெற்றியை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும். மகாளய பட்ச காலத்தில் நலிந்தவர்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும்.
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். நல்ல தோற்றம், நிறைந்த நிம்மதி, சிந்தித்து செயல்படும் திறன், ஒரு கூட்டத்தை வழி நடத்தும் திறமை ஆகியவை ஏற்படும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும். நிறைந்த ஆரோக்கியம், ஆடம்பரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள் மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும். ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய் மாமாவுடன் ஏற்பட்ட மனச்சங்கடம் மாறும். திருமணத் தடை அகலும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகாளய பட்ச காலத்தில் சுமங்கலி பெண்களுக்கு தான தர்மம் வழங்கவும்.
எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம் வளம் பெறுவதால் எதிர்காலத் தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். வீண் செலவுகள், விரயங்கள் இருந்தாலும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். புத்திரப் பேறில் நிலவிய தடைகள் விலகும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும். எத்தனை அலைச்சல்கள் இடமாற்றங்கள் வந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் தளராது. அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு விரும்பிய மாற்றங்கள் வந்து சேரும். பெற்றோர்களால் ஏற்பட்ட மன பாரம் குறையும். மகாளய பட்ச காலங்களில் திருநங்கைகளின் தேவையறிந்து உதவவும்.
நிம்மதியான வாரம். ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளது. சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எதைப் பற்றி கவலைப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே தலையாய நோக்கமாக இருப்பீர்கள். வீரமும் தைரியமும் எடுத்த காரியத்தில் இறுதி வரை போராடி ஒரு முடிவை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகமும் கூடும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். மகாளய பட்ச காலத்தில் உடல்நலம் குறைந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.