வழிபாடு

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிலருக்கு மறு திருமணம் நடக்கும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும்.

சிம்மம்

சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். சொத்துப் பங்கீட்டில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். கடனுக்காக பணயம் வைத்த வீட்டுப்பத்திரங்கள் மற்றும் நகைகளை மீட்டெடுக்கும் வாய்ப்பு வரும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

சிலருக்கு மறு திருமணம் நடக்கும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் இது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசை புத்திக்கு ஏற்ப செயல்படுவது உத்தமம். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பங்குனி உத்திரம் அன்று செவ்வரளி மாலை அணிவித்து சிவனை வழிபடவும்.

கன்னி

வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். தொழிலில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மன நிறைவான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல் நிலை, லாபகரமான வருமானம் ஆகியவற்றை இந்த வாரத்தில் காணப்போகிறீர்கள்.

திருமணம், குழந்தைப் பேறு என மனம் மகிழும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மாணவர்கள் விரும்பிய கல்வியை விரும்பிய கல்லூரியில் இந்த ஆண்டு தொடர முடியும். பங்குனி உத்திரம் அன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

துலாம்

விவேகத்துடன் செயல்பட்டு இலக்கை அடையும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். இதுவரை குடும்பத்திலிருந்த பிரச்சினைகள், தொழில் ரீதியாக சந்தித்த பாதிப்புகள் விலகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சில அண்ணன் தம்பிகள் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். திருமணத் தடை அகலும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கடன் தொல்லை விலகும். தொழில் சிறப்பாக நடக்கும். கூட்டம் கூடும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அரிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் விலகும். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். பங்குனி உத்திரத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

விருச்சிகம்

தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். சிலர் நல்ல திட்டம் போட்டு புதிய தொழில் துவங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள். கூலித் தொழிலாளிகளுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கான சுப செலவு அதிகரிக்கும். கடனாலும், நோயாலும், வம்பு வழக்காலும் பட்ட அவஸ்தை குறையத் துவங்கும். கொடுக்கல் வாங்கல், சுமூகமாகும்.

வரா கடன்கள் வசூலாகும். திருமணம், சுப காரியம் தொடர்பாக பேசலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் பேசி பாகப் பிரிவினை செய்ய உகந்த நேரம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். பங்குனி உத்திரம் நட்சத்திர நாளில் சிவனுக்கு தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406