மேஷம்
பணப் பிரச்சினைகள் நீங்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். சேமிப்புகள் உயரும். காரியத் தடை அகலும். முயற்சிகளுக்கான பலன்களை உடனடியாக காண முடியும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். வாழ்க்கைத் துணைக்கு கவுரவப் பதவிகள், அரசு உத்தியோகம் கிடைக்கும்.
திருமண முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு மறையும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் பிறரிடம் கருத்து தெரிவிக்கும் போது கவனமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும். புத்திர பாக்கியம் உண்டாகும். தாயின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். பங்குனி உத்திரம் அன்று கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
ரிஷபம்
சுப விரயங்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நான்காம் பார்வை குருவின் மேல் பதிவது குருமங்கள யோகமாகும்.சில எதிர்பாராத விரயங்கள் ஏற்பட்டாலும் புதிய சொத்துக்கள் சேரும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களால் சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும். சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு குரு தன ஸ்தானத்தை விட்டு நகர்வதால் முக்கிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். பாகப் பிரிவினை தொடர்பாக தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறுமன பிணக்கு ஏற்படலாம். பங்குனி உத்திரம் அன்று மகாலஷ்மி அஷ்டோத்திரம் படித்து வர அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரம். ராசியில் 7, 10-ம் அதிபதி குரு சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளிடம் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். கணவன்- மனைவி இடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும்.
பண நெருக்கடிகள் அகலும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உள்ளது. கோட்சார செவ்வாயால் தடைபட்ட திருமணம் கைகூடி வரும். சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். சுபவிருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பங்குனி உத்திரம் அன்று சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
கடகம்
புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் வாரம். தனாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. பணியாளர்களுக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். சாமர்த்தியமாக திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். புதிய முயற்சிகள் நிறைவேறும்.
தனித் திறமைகள் மிளிரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். படித்த படிப்புக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். சில அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருப்பதால் வைத்தியச் செலவு குறையும். மாமன், மைத்துன ருடன் ஏற்பட்ட விரிசல் சீராகும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். பங்குனி உத்திரம் அன்று முருகன் வழிபாடு செய்யவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406