நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் தினமும் இசை, நாட்டியம், பஜனை குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் தினமும் இசை, நாட்டியம், பஜனை குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி செல்லும் குழந்தைகள் அவர்களுடைய பாட புத்தகங்கள், குடும்பத்தில் உள்ள ஆன்மிக நூல்கள் உள்ளிட்டவற்றை வருகிற 18-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து கோவிலில் வழிபாட்டு பூஜையில் வைக்கலாம்.
21-ந்தேதி வரை பூஜையில் வைத்து வழிபட்ட புத்தகங்களை அன்று காலை 9 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளலாம். 18, 19, 20 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு கோவிலின் அருகேயுள்ள ஷோபானம் அரங்கில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும் விளக்கு பூஜையில் பங்கேற்க பெண் பக்தர்கள் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் 3 வேளையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ந்தேதி காலை 7 மணி முதல் சரஸ்வதி பூஜைக்கு பின் வித்யாரம்பம் நடைபெற உள்ளது.