வழிபாடு

பிளாஞ்சேரி சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம்

சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மன் அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை சிம்ஹாருட வராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT