வழிபாடு

வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவ வீதிஉலா

வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT