வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 அக்டோபர் 2024

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு புரட்டாசி-29 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி இரவு 10.20 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 8.52 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண, அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை.

சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்குசாமி கோவில்களில் மாலை ரஷிப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - நற்செயல்

மிதுனம் - செலவு

கடகம் - நிம்மதி

சிம்மம் - அமைதி

கன்னி - மாற்றம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - ஆதரவு

மகரம் - வெற்றி

கும்பம் - உண்மை

மீனம் - சுகம்