வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 மார்ச் 2026: சந்திர கிரகணம்

கோவை ஸ்ரீ கோணியம்மன் திருக்கல்யாணம்.ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-19 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி மாலை 5.52 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : மகம் காலை 8.07 மணி வரை பிறகு பூரம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று கேது கிரஹஸ்த சந்திர கிரகணம், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் அபிஷேகம்

இன்று கேது கிரஹஸ்த சந்திர கிரகணம் ஆரம்பம் மாலை 4.36 மணிக்கு மத்திமம் மாலை 5.04 மணிக்கு முடிவு காலம். இரவு 7.53 மணிக்கு மகம், பூரம், உத்திரம், பரணி, பூராடம் நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். கோவை ஸ்ரீ கோணியம்மன் திருக்கல்யாணம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-சிறப்பு

மிதுனம்-வரவு

கடகம்-நன்மை

சிம்மம்-பாராட்டு

கன்னி-வெற்றி

துலாம்- ஆதரவு

விருச்சிகம்-ஆக்கம்

தனுசு- பரிசு

மகரம்-பணிவு

கும்பம்-பண்பு

மீனம்-நிறைவு