வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 ஜனவரி 2026: பவுணர்மி, ஆருத்ரா தரிசனம்

குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-19 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி மாலை 4.42 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : திருவாதிரை இரவு 6.56 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பவுணர்மி, ஆருத்ரா தரிசனம், ஸ்ரீவரதராஜ மூலவருக்கு அபிஷேகம்

இன்று பவுர்ணமி. ஆருத்ரா தரிசனம் (நடராஜர் அபிஷேகம்), குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. நயினார்கோவில் அன்னை சவுந்தர நாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சன சேவை.

திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் அலங்காரம், திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-பணிவு

கடகம்-தெளிவு

சிம்மம்-இன்பம்

கன்னி-வாழ்வு

துலாம்- போட்டி

விருச்சிகம்-ஆக்கம்

தனுசு- பரிசு

மகரம்-பெருமை

கும்பம்-ஆதாயம்

மீனம்-செலவு