வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 நவம்பர் 2025: திருத்தணி முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-5 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை பிற்பகல் 2.37 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம் : அனுஷம் பிற்பகல் 2.26 மணி வரை பிறகு கேட்டை.

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கோடி கன்னிகாதானம் தாத்தாசாரியார் திருநட்சத்திர வைபவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-சிறப்பு

மிதுனம்-வரவு

கடகம்-உயர்வு

சிம்மம்-ஆதரவு

கன்னி-நன்மை

துலாம்- தெளிவு

விருச்சிகம்-ஜெயம்

தனுசு- பரிசு

மகரம்-புகழ்

கும்பம்-சாந்தம்

மீனம்-நன்மை