வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 பிப்ரவரி 2026- சர்வ அமாவாசை

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-5 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அமாவாசை இரவு 6.30 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.17 மணி வரை பிறகு சதயம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம் திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-நட்பு

மிதுனம்-புகழ்

கடகம்-சுகம்

சிம்மம்-பயணம்

கன்னி-அமைதி

துலாம்- சாதனை

விருச்சிகம்-லாபம்

தனுசு- ஆர்வம்

மகரம்-உயர்வு

கும்பம்-முயற்சி

மீனம்-மேன்மை