வழிபாடு

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 மார்ச் 2026: ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-28 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : மூலம் நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, முருகப்பெருமானுக்கு வைரவேல் தரிசனம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை, பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-வரவு

மிதுனம்-நிறைவு

கடகம்-பாராட்டு

சிம்மம்-நலம்

கன்னி-இன்பம்

துலாம்- பக்தி

விருச்சிகம்-லாபம்

தனுசு- ஆக்கம்

மகரம்-தனம்

கும்பம்-களிப்பு

மீனம்-ஆதரவு