திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று இரவு ஏழுமலையான் சந்திர பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர கோவிந்தா கோவிந்தா என முழக்க மிட்டனர். சாமி வீதி உலாவின் போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று இரவு ஏழுமலையான் சந்திர பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர கோவிந்தா கோவிந்தா என முழக்க மிட்டனர். சாமி வீதி உலாவின் போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது.
மழையில் நனைந்தபடி வாகன சேவைக்கு முன்பாக கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து நடுங்கியபடி சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவில் 8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இன்று இரவு ஏழு மலையான் குதிரை வாகனத்தில் எழுந்தருளுக்கிறார். பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான நாளை காலை சிவாச்சாரியார்கள் சக்கரத்தாழ்வார்களை ஊர்வலமாக புஷ்கரணிக்கு கொண்டு செல்கின்றனர். புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார்களுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்த வாரிக்கு பிறகு சக்கரத்தாழ்வார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுகின்றனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேவஸ்தானம் சார்பில் நீச்சல் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். நாளை மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற் சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் நேற்று 65,223 பேர் தரிசனம் செய்தனர். 27, 112 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ. 3.52 கோடி உண்டியல் வசூலானது. 4.29 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.