வழிபாடு

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு

உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாலை மலர்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடந்து வந்தது. நிறைவுநாளான நேற்று காலை யாகசாலையில் வைதீக காரியகர்மங்களும், அதன் பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது.

மாலை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து யாக சாலையில் வேத நிகழ்ச்சிகள், பூர்ணாஹுதி, உற்சவமூர்த்திகள் மற்றும் கும்பத்தை விமான பிரதட்சணைக்கு கொண்டு வருதல், கும்ப ஆவாஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இத்துடன் பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.