வழிபாடு

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் தொடக்கம்

ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் 22-ந்தேதி வரை நடக்கிறது.ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.

மாலை மலர்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.

அதன்பிறகு உற்சவர் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து ஜி.எஸ்.மாடவீதி, காந்தி வீதி வழியாக மங்கள வாத்தியங்கள் இசைக்க கங்குந்திரா மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து சிறப்புப்பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது. அங்கிருந்து கோவிலுக்கு ஆண்டாள் கொண்டு செல்லப்பட்டாா்.