சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் உள்ள ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 108-ம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி பூஜை விழாவை நடைபெற்றது. இதைெயாட்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது.
இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பால்குடம் ஊர்வலமானது திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி மார்க்கெட் பகுதி வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க சாய்பாபா கோவிலை வந்தடைந்தது. பின்னர் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.