வழிபாடு

கந்த சஷ்டி திருவிழாவில் திருச்செந்தூர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாணம்

தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

7-ம் திருவிழாவான நேற்று மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தெய்வானை அம்பாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு மேல் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

ஊஞ்சல் காட்சி

இன்று இரவு குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். நாளை, நாளை மறுநாள் மற்றும் 20-ந்தேதி ஆகிய 3 நாட்களும் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

மஞ்சள் நீராட்டு

21-ந்தேதி 12-ம் திருவிழா அன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT