வழிபாடு

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கைசிக ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கமாகும்.

மங்கள பொருட்கள்

அதன்படி, இன்று திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஸ்ரீரங்கம் வருகை தந்தனர். அவர்கள் மூலவர் ரெங்கநாத சுவாமி மற்றும் உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்களும், ெரங்கநாயகி தாயாருக்கு பட்டுப் புடவைகளும், மாலைகள் மற்றும் மங்களப் பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் கோவில்

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்குப் பூரண கும்பமரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மங்கள பொருட்களை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், தலைமை பட்டாச்சார்யார் சுந்தர்பட்டர் மற்றும் கோவில் அலுவலர்களிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

பக்தர்கள் தரிசனம்

பின்னர், அந்த பட்டு வஸ்திரங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெருமாள் மற்றும் தாயாருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT