வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் அங்குரார்ப்பணம்

புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.புற்று மண் எடுத்து சிறப்பு பூஜை நடந்தது.

மாலை மலர்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்புப்பூஜைகள் செய்து அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.

அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.