வழிபாடு

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிவராத்திரி விழா மார்ச் 1-ந் தேதி நடைபெறுகிறது.

மாலை மலர்

ஆட்டையாம்பட்டி:

சேலம் அருகே கொண்ட லாம்பட்டியை அடுத்துள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வருகிற மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிவராத்திரி விழா நடை பெறுகிறது.

இதையொட்டி அன்று இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், 3 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 6 மணிக்கு 4-ம் கால பூஜை யும் நடைபெற உள்ளது. 

முந்தைய நாளான வருகிற 28-ந்தேதி மாலை பிரதோஷ வழிபாடு மற்றும் சிவன், நந்திகேஸ்வரர் சாமிக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது.