சீதையைப் பிரிந்து வாடிய ராமபிரான் தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே, ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க உபதேசித்தார்.
கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.
‘மோகினி’ என்ற பெயரே, அது பற்று, மயக்கம், காமம், பேராசை மற்றும் அகங்காரம் ஆகிய மாயைகளை வெல்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த புனித நாளில் மோகினி வடிவில் உள்ள விஷ்ணு பகவானை வழிபடுவது, மனித வாழ்வின் அனைத்து பந்தங்களிலிருந்தும் ஒருவரை விடுவித்து, முக்திக்கு வழிவகுக்கிறது.
மேலும் ஏழை, மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து பெருமாளின் அனுக்கிரகத்தை பெறலாம்.
நமது வாழ்வில், நமது உயர்ந்த நோக்கத்தில் இருந்து நம்மை விலக்கிச் செல்லும் ‘கவர்ச்சிகரமான’ கவனச் சிதறல்களைக் கடந்து பார்க்கும் ஞானத்தை மோகினி ஏகாதசி அருள்கிறது.
மனதார பெருமாளை வழிபட்டு, அவரது மந்திரங்களை சொல்லி வழிபட்டு, நம்முடைய கடந்த கால பாவங்களுக்காக மன்னிப்பு கேட்பதால் நம்முடைய பாவங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும் என சொல்லப்படுகிறது.
1. சித்திரை வளர்பிறை - காமதா ஏகாதசி
2. சித்திரை தேய்பிறை - பாப மோசனிகா ஏகாதசி
3. வைகாசி வளர்பிறை - மோகினி ஏகாதசி
4. வைகாசி தேய்பிறை - வருத்தினி ஏகாதசி
5. ஆனி வளர்பிறை - நிர்ஜல ஏகாதசி
6. ஆனி தேய்பிறை - அபார ஏகாதசி
7. ஆடி வளர்பிறை - சயன (அ) தேவசயனி (அ) பத்ம ஏகாதசி
8. ஆடி தேய்பிறை - யோகினி ஏகாதசி
9. ஆவணி வளர்பிறை - புத்ரஜா ஏகாதசி
10. ஆவணி தேய்பிறை - காமிகா ஏகாதசி
11. புரட்டாசி வளர்பிறை- பத்மநாபா ஏகாதசி
12. புரட்டாசி தேய்பிறை - அஜ ஏகாதசி
13. ஐப்பசி வளர்பிறை- பாபாங்குசா ஏகாதசி
14. ஐப்பசி தேய்பிறை - இந்திரா ஏகாதசி
15.கார்த்திகை வளர்பிறை - பிரபோதின ஏகாதசி
16.கார்த்திகை தேய்பிறை - ரமா ஏகாதசி
17. மார்கழி வளர்பிறை - வைகுண்ட ஏகாதசி
18. மார்கழி தேய்பிறை - உற்பத்தி ஏகாதசி
19. தை வளர்பிறை - புத்ரதா ஏகாதசி
20. தை தேய்பிறை - சபலா ஏகாதசி
21. மாசி வளர்பிறை - ஜெய ஏகாதசி
22. மாசி தேய்பிறை - ஷட்திலா ஏகாதசி
23. பங்குனி வளர்பிறை - ஆமலகி ஏகாதசி