வழிபாடு

பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை வழிபாடு

புரட்டாசி பவுர்ணமியையொட்டி ஆலயத்தில் உள்ள கண்ணாடி அறையில் ஸ்ரீசத்தியநாராயண சுவாமி அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.

புரசைவாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள் சன்னதிகளில் விசேஷ புஷ்ப அங்கி சேவையில் காட்சியளித்தனர். தொடர்ந்து உற்சவர் கருட வாகனத்தில் வீற்றிருக்க கருட சேவை நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஒவ்வொரு வாரமும் திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவர் பவளவண்ணப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு விசேஷ மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று உற்சவருக்கு வெண்பட்டு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு 35 கிலோ எடையில் ஏலக்காய், லவங்கம் என வாசனை நிறைந்த மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. உற்சவர் மகாலட்சுமி தாயாருக்கு ஏலக்காய் மாலை, ஜடை கிரீடம், ஏலக்காய் அங்கி அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

புரசைவாக்கம்

புரசைவாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள் சன்னதிகளில் விசேஷ புஷ்ப அங்கி சேவையில் காட்சியளித்தனர். தொடர்ந்து உற்சவர் கருட வாகனத்தில் வீற்றிருக்க கருட சேவை நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.

அன்னதானம்

புரட்டாசி பவுர்ணமியையொட்டி ஆலயத்தில் உள்ள கண்ணாடி அறையில் ஸ்ரீசத்தியநாராயண சுவாமி அலங்கரிக்கப்பட்டு இருந்தார். மதியம் அன்னதானம் நடந்தது. பிற்பகலில் ஸ்ரீசத்திய நாராயண பூஜை நடைபெற்றது.

SCROLL FOR NEXT