வழிபாடு

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது

ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.15-ந்தேதி அன்னையின் திருத்தேர் பவனி நடக்கிறது.

வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றமானது நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக கொடியானது பவனியாக கொண்டு வரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

அதிகாலை 5 மணி, 6.15 மணி, 7.45 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 15-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனியும் அதனைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, துணை பங்குதந்தை எழில் நிலவன் தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு நலப்பணி குழு மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT