வழிபாடு

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாலை மலர்

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி, சகஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பவித்திர மாலைகள் சமர்ப்பணம் நடந்தது. அப்போது மூலவர் பத்மாவதி தாயார், உற்சவர் பத்மாவதி தாயார், உபகோவில்கள், பரிவார தேவதைகள், விமானப் பிரகாரம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்பிறகு மாலை மற்றும் இரவில் யாகசாலையில் வைதீக காரியக்கர்மங்கள் நடந்தன.