வழிபாடு

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதி.ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25-ந் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது.

டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது.

அதன்பிறகு மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

2025-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மாலை, ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

ஜனவரி 20-ந் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும்.

பின்னர் கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும். 

SCROLL FOR NEXT