வழிபாடு

குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெறாது

வருகிற 31-ந் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெறாது.

மாலை மலர்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.

கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், உள் திருவிழாவாக கோவிலில் உள்ளே மட்டும் நடைபெறும்.

சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம், சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் ஆகிய வைபவங்கள் நடைபெறாது.

இந்த தகவலை. கோவில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.