வழிபாடு

வெள்ளாங்கோவில் ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாதஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

காமாட்சியம்மன் கோவிலில் விசேஷ சந்தி வழிபாடு, விமான கோபுர கலச ஸ்தாபனம் மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாதஈஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி புண்ணிய தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை அழைத்து வருதல், கணபதி ஹோமம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வழிபாடு

நேற்று காமாட்சியம்மன் கோவிலில் விசேஷ சந்தி வழிபாடு, விமான கோபுர கலச ஸ்தாபனம் மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கூனம்பட்டி திருமடம் நல்வாக்கு நாயகர் வேள்விதிலகம் சிவஸ்ரீ டாக்டர் ச. நடராஜ சுவாமிகள், சென்னிமலை குருக்கள்பாளையம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலய ஆதீனம், சிவகமாயாஸ்கர குலகுரு சிவஸ்ரீ அருண் ஆலாலசுந்தர பண்டிதகுரு சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். அருள்மலை சிவஸ்ரீ ச. சிவானந்த சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ ச. பாலசுப்பிரமண்ய சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேக பூஜைகளை முன்னின்று நடத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர் வி.எம். பழனிநாதன், ஆலய சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் வெள்ளாங்கோவில் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT