வழிபாடு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது.

நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது.

இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.