திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி அளவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் மாலை 5 மணி அளவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து, பின்னர் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.