ராசி சக்ரத்தில் 18-வது நட்சத்திரம். கேட்டை. இதன் சமஸ்கிருத பெயர் ஜேஷ்டா என்பதாகும். ஜேஷ்டா என்றால் மூத்தது என்று பொருள் இதன் ராசி அதிபதி செவ்வாய்.
இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் கடைகள் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை தேவேந்திரன். இது புதனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் கேது. நீச்சம் அடையும் கிரகம் ராகு. கல்வியில் தடை உள்ளவர்கள் கேட்டை நட்சத்திரம் வரும் நாளில் நவதிருப்பதிகளை வழிபட கல்வித்தடை விலகும்.
அருகம்புல் கேட்டை நட்சத்திர வடிவமாகும். மூல வடிவம் விநாயகராகும். கேட்டை நட்சத்திர நபர்கள் தினமும் புதன் ஓரையில் விநாயகருக்கு அருகம்புல் சமர்பித்து வணங்க செல்வம், புகழ் வளம் பெருகும்.
மூலம் கால புருஷ 9-ம் ராசியான தனுசு வீட்டில் அமைந்துள்ளது. ராசி சக்கரத்தின் 19-வது நட்சத்திரமாகும். இந்த ராசியின் அதிபதி குரு. இது ஞானத்தை வழங்கும் கேதுவின் நட்சத்திரமாகும். இதன் வடிவம் அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை போல் இருக்கும். இந்த நட்சத்திரம் குருத்து போல் இருப்பதால் இதன் தமிழ் பெயர் குருது. இதன் இருப்பிடம் குதிரை லாயம். அதிதேவதை அசுர தேவதைகள். இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது என்பதால் தியானம் செய்ய, தீட்சை பெற மந்திர உபதேசம் பெற உகுந்ததாகும். இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அகத்தியர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தடைகளும் நீங்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தீவினைகள் நெருங்காது.
பூராடம் 20வது நட்சத்திரம். கால புருஷ லக்னமான மேஷத்திற்கு ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் அமைந்துள்ளது. இந்த ராசியின் அதிபதி குரு பகவான். பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். பொதுவாக ஜோதிடத்தில் குருபகவான் தனகாரகன் நாடி நூல்களில் சுக்கிரன் தனகாரகன் குருவினுடைய வீட்டில் அமர்ந்த சுக்கினுடைய நட்சத்திரம் பூராடம் என்பதால் பொருளாதார வளர்ச்சி உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் தனலட்சுமியை வழிபட்டு வந்தால் பண வசதி பெருகும் இந்த நட்சத்திரம் நாளில் சென்னிமலைக்கு சென்று முருகனை வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும்.
27 நட்சத்திரங்களில் 21-வது நட்சத்திரம் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம். இதன் சமஸ்கிருத பொருள் பிந்தைய வெற்றி. உத்திராடம் நட்சத்தி ரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் 2, 3, 4-ம் பகுதி மகர ராசியில் அமைந்துள்ளது எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கை அமையும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து ஐயப்பனை சங்கரநாராயணனை வழிபட நல்ல உத்தியோகம் தொழில் அமையும்
சரியான தொழிலோ அல்லது உத்தியோகமோ அமையாதவர்கள் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை போட்டு அம்மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டால் நிச்சயமாக நல்ல உத்தியோகம் கிடைக்கும். சபரிமலைக்கு செல்ல.. முடியாதவர்கள் இந்த நட்சத்திரத்தன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வழிபடலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அல்லது பவுர்ணமி திதியில் சித்தர்களை ஜீவ சமாதியில் சென்று வழிபடலாம்.
திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் அமைந்துள்ளது இதன் அதிபதி சந்திரன். மகர ராசியின் அதிபதி சனிபகவான். திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள அனந்தபத்மநாதனை வழிபட சாஸ்திர புலமை பண்டித்தியம் ஏற்படும். சுயதொழில் வியாபாரம் செய்பவர்கள் திருவோணம் நட்சத்திரத்தில் மகா விஷ்ணு வழிபட தொழில் விருத்தி வியாபார விருத்தி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூலோக வைகுண்டம் என்படும் ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரையும், மகாலட்சுமியையும் குரு, சந்திர, சுக்ர ஹோரைகளில் அல்லது திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமை கிழமைகளில் வழிபட வளமான எதிர்காலம் உண்டாகும்.
ராசி மண்டலத்தின் 23-வது நட்சத்திரம் அவிட்டம். அவிட்டம் நட்சத்திரம் மகரம் மற்றும் கும்ப ராசியில் அமைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்களும், கும்ப ராசியில் இரண்டு பாதங்களுமாக இருக்கும்.
மகர கும்ப ராசிகளின் அதிபதி சனி ஆகும். அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இதில் உச்சமடையும் கிரகம் செவ்வாய். அடிக்கடி விபத்துக்கு உள்ளாகுபவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தன்று மிருத்யுஞ் செய ஹோமம் செய்தால் விபத்துகளில், ஆபத்துகளில் இருந்தும் தப்பிக்கலாம். பேய், பிசாசு பிடித்தவர்களுக்கு பேய் ஓட்ட, ஏவல் பில்லி சூனியங்களில் இருந்து விடுபட, அவிட்ட நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். தொழில் தொடர்பான போட்டியை சமாளிக்க அவிட்டம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட தொழில் போட்டிகள் குறையும் குறிப்பாக பழனி முருகனை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைத்து வழிபட பணவிருத்தி செல்வ விருத்தி ஏற்படும்.
ராசி மண்டலத்தின் 24-வது நட்சத்திரம் சதயம். இது கும்ப ராசி அமைந்துள்ளது கும்ப ராசியின் அதிபதி சனி ஆகும். சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. சதயம் என்பதன் சமஸ்கிருத பெயர் சதாபிஷா. இதன் பொருள் நூறு மருத்துவர்கள். சதய நட்சத்திரத்தின் உருவம் பூங்கொத்து, தராசு, ஒட்டகம் என பலவாறாக கூறப்படுகிறது. இது வானில் செக்கு அல்லது லிங்கம் போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ் பெயர் செக்கு. இது நூறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டமாகும்.
இந்த நட்சத்திரத்திரம் குணப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நக்ஷத்திரம் புத்துணர்ச்சி மற்றும் மறுபிறப்பு சக்தியைக் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் தான் சதயம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “நூறு மருத்துவர்கள்” என்று பொருள். மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றியடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் கால பைரவரை வழிபட வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொழிலிலில் கடுமையான இழப்புகளை சந்திப்பவர்கள், அதிக நஷ்டம் உள்ளவர்கள் இந்த நட்சத்திரம் நாளில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய உயர்வு உண்டு. கை கால் மூட்டுகளில் வலியுடையவர்கள், அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பவர்கள் சதயம் நட்சத்திரம் வரும் நாளில் சிவ ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் உடம்பில் உள்ள எல்லா வலிகளும் நீங்கும். செய்வினை கோளாறு, மாந்தரீக பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.
இந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட குணப்படுத்த முடியாத நோய்கள் எல்லாம் குணமாகும் ஏவல் பில்லி சூனியம் பாதிப்புகள் விலகும் ராஜா ராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரம் சதயம். இவர் சிவ வழிபாட்டின் மூலம் வெற்றி மேல் வெற்றியை அடைந்தார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
27 நட்சத்திரங்களில் 25-வது நட்சத்திரம் பூரட்டாதி. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும் நான்காம் பாதம் மீன ராசியிலும் அமைந்துள்ளது.
இதன் அதிபதி குருவாகும். இதன் அதிபதி குரு என்பதால் பெரியவர்களை அணுகி மந்திர உபதேசம் பெறவும், தெய்வ வழிபாட்டிற்கும் உகந்த நட்சத்திரமாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு காமதேனு என்ற ஒரு பெயர் உள்ளதால் வறுமை நீங்க பரிகாரங்கள் செய்ய உகந்த நட்சத்திரம் ஆகும். பொருளாதார முன்னேற்றம் அடைய பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட விரும்பிய படி நல்ல தொழில் உத்தியோகம் அமையும். இந்த நட்சத்திர நாளில் சதுரகிரி மலைக்கு சென்று வந்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
குபேரனின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை குபேரர் வழிபாடு செய்து வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். பத்ரா என்ற நட்சத்திர கூட்டத்தின் பிற்பகுதி உத்திரட்டாதி. இதன் சமஸ்கிருத பெயர் உத்திர பத்ரா பாதம் என்பதாகும். இதன் வடிவம் வானில் பார்ப்பதற்கு முரசு போல் காட்சியளிக்கும். எனவே இதன் தமிழ் பெயர் முரசு. இதன் வேறு பெயர்கள் முரசு, யூனிகான், ஒற்றை மீன்,காமதேனு. குருவின் வீட்டில் உள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உண்டு. உத்திரட்டாதியில் நீச்சம் அடையும் கிரகம் புதன்.
இதன் வசிப்பிடம் வீடு. இதன் அதிதேவதை காமதேனு. இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை காமதேனு என்பதாலும் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து காமதேனுவே வழிபட உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து மதுரையில் உள்ள கள்ளழகரை வழிபட நலிந்த வியாபாரம் விருத்தி அடையும் தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் காமதேனுவை வழிபட வாழ்க்கை வளமாகும்.
ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இதற்கு கடை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு. இதன் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் சுக்கிரன். ரேவதி என்றால் மிகுதியான செல்வம் உடையது என்ற சமஸ்கிருத பொருள். கால புருஷ சக்கரத்தின் கடைசி நட்சத்திரம். ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் மகாலட்சுமியை பூஜித்து வழிபட கையில் பணம் இருப்பு, சேமிப்பு போன்றவை அதிகமாகும்.
இந்த நட்சத்திரம் வரும் நாளில் மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசிக்க செல்வம் பெருகும்.மேலும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொள்வதால் விசேஷமான பலன்களை அடைய முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குருமார்களின் பாதுகைகள் அல்லது தெய்வ உருவங்களின் பாதுகைகளை வழிபட, காலணிகளை தானம் வழங்க வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை, செயல்பாடு. ஒருவர் வாழ்வில், நடக்கின்ற விஷயங்கள் அனைத்தும் ராசியால் நடக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், ஒருவர் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரம் தான் வாழ்வின் செயல்கள் அனைத்திற்கும் காரணம்.