அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது;
மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. பேடு நீங்கிப் பிறந்த காலையும், ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது; ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது; தானமும் தவமும் தான்செய்வராயின் வானபூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி புதன் என்பதால் வித்யா ஆரம்பம் செய்ய, பூந்தோட்டம் அமைக்கலாம்.வர் நாடு வழி திறந்திடுமே”
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இது அவ்வையார் எழுதிய பாடல் வரிகளாகும். மனிதப் பிறவியின் அருமையையும், நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப்பாடல் விளக்குகிறது. பல கோடி உயிரினங்களைக் கடந்து மனிதனாகப் பிறப்பது மிகவும் கடினமானது. மனிதப் பிறவி எடுத்தாலும், உடல் ஊனங்கள் ஏதுமின்றி நிறைவான உடல் உறுப்புகளுடன் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் அறிவு வளர்த்து, நல்ல கல்வி கற்கும் ஆர்வம் பெறுவது கடினம். கல்வியும் ஞானமும் பெற்றாலும் பிறருக்குத் தானம் செய்வதும், தவம் தர்மம் வழியில் நடப்பது அதைவிட அரிது. இத்தகைய நற்செயல்களை மனிதர்கள் செய்துவிட்டால், அவர்களுக்கு முக்தி எனப்படும் வானவர் உலகம் திறக்கும்.
ஒரு மனிதன் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி பொருளீட்டினால் அவனது விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறி எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்பதாகும். அதர்மமாக வாழ்ந்து பொருள் ஈட்டி விருப்பங்களை நிறைவு செய்யபவர்கள் மறுபிறவி எடுத்து நற்கதி அடைய முயல வேண்டும். ஒருவரின் கர்மாவில் தனிப்பட்ட ஒருவரின் பாவ புண்ணியங்கள் மட்டும் இருக்காது. அதில் ஜாதகரைச் சார்ந்தவர்களின் கர்மாவும் இணைந்து இருக்கும். முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் அவர்களின் சந்ததிகள். அதாவது ஒருவரின் உடலில் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி, நோய், கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்படுகிறது. அவர்கள் வழியாக வந்த நமது தீய வினைகளை அனுபவிக்க ஏற்ற வகையிலேயே ஒருவரின் உடல் வடிவ மைக்கப்படும்.
ராசி மண்டலம் என்பது கிரகங்களின் சுற்றுப்பாதையாகும். இந்த ராசி மண்டலத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒளியிலும் உருவத்திலும் சூரியனுக்கு நிகரானவை. சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டுமே சுய ஒளியின் பிரகாசிக்கும் நட்சத்திரமாகும். மற்ற கிரகங்கள் சூரியனுடைய ஒளியை பிரதிபலிக்கும் நட்சத்திரங்களாகும். நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியில் பிரகாசிக்க கூடியவை என்பதால் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். எனவே கிரக தோஷங்களை மாற்றி அமைக்கும் வலிமை நட்சத்திரங்களுக்கு உண்டு.
ராசி மண்டலத்தில் சந்திரன் பூமியை 27 நாட்களில் ஒரு முறை சுற்றி வருகிறது. மற்ற கிர கங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சுகளை பூமிக்கு பெற்று தரும் உபகிரகமாக சந்திரன் அமைந்துள்ளது. ராசி மண்டலத்தில் சந்திரன் பூமியை சுற்றி வரும் போது அதற்கு நேர் மேலாக இருக்கும் நட்சத்திரக் கூட்டம் 27 நட்சத்திரமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. அவையே அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களாகும். ஒரு நாளில் எந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு கீழ் நேராக சந்திரன் சஞ்சரிக்கின்றாரே அந்த தினத்தில் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளை சந்திரன் பூமிக்கு பெற்றுத் தரும். அத்தகைய நட்சத்திர கதிர் வீச்சுகளை நாம் முழுமையாக கிரகித்துக் கொள்வதன் மூலம் கிரக தோஷங்களில் இருந்து நிவாரண பெறலாம்.
இதை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஜோதிடத்தில் முகூர்த்தம் என்னும் பிரிவை ஏற்படுத்தினார்கள். ஒரு மனிதன் நல்ல முகூர்த்தத்தில் பிறக்காவிட்டாலும் அவன் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை நல்ல முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் அவன் செய்யும் செயல்கள் தடையின்றி நடக்கும். எனவே முகூர்த்தம் என்பது ஜோதிடத்தை பொருத்தவரை கிரக தோஷ பரிகாரமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த நட்சத்திரத்தில் என்ன காரியம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை இங்கு குறிப்பிட்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாங்கத்தில் உள்ள பஞ்ச அங்கங்களான வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றில் நட்சத்திரம் மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது. குறிப்பாக பரிகாரம் செய்யும் போது நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல் பூமியில் ஜனனமாகும் ஒரு குழந்தை தான் பிறக்கும் ஜென்ம நட்சத்திரம் மூலமாக தன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் உடல்காரகன் எனும் சந்திரன் நின்ற நட்சத்திரம் மூலமாகவே அனுபவிக்கிறது. எனவே இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜென்ம நட்சத்திர வழிபாடுகளை கடைபிடித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினியாகும். இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி கேதுவாகும். இதில் உச்சமடையும் கிரகம் சூரியனாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி. அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். இந்த நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் சிவபெருமானை வணங்கிவிட்டு அரசு சம்பந்தமான காரியங்களில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும். அரசாங்கத்தில் உயர் பதவியை அடைய விரும்புபவர்கள் அரசியல் செல்வாக்கு பெற விரும்புபவர்கள் பெயர் புகழ் அடைய விரும்புபவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் திருவண்ணாமலை சென்று அங்குள்ள அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு வந்தால் நினைத்த பதவியை அடையலாம். ஜென்ம நட்சத்திர நாளில் குதிரைக்கு கொள்ளு தானம் வழங்க வாழ்க்கை வளமாகும்.
27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணி. மேஷ ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு, முக்கோணம் போன்று காட்சியளிக்கிறது. இதில் நீச்சமடையும் கிரகம் சனி. இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் நீசம் அடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது பரணியில் வேலைக்கு அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பாளர்கள். பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் சென்று தொடர்ந்து 3 மாதங்கள் சென்று காமாட்சியை வழிபட்டால் திருமண தடைகள் அகலும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் வலம்புரிச் சங்கில் புனித நீர் தயாரித்து காமாட்சியம்மன் படத்தின் முன்பு வைத்து அருந்த வாழ்க்கை வளம் பெறும்.
இது ராசி மண்டலத்தின் 3 வது நட்சத்திரமாகும். இது சூரியனின் நட்சத்திரமாகும். இதன் முதல் பாதம் செவ்வாயின் மேஷ ராசியிலும் 2, 3, 4ம் பாதங்கள் சுக்ரனின் வீடான ரிஷபத்திலும் உள்ளது. இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் சுப காரியம் செய்ய உகந்ததல்ல. மீள முடியாத கடன் தொல்லையில் இருப்பவர்கள் தொடந்து ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். திருமணத் தடை இருப்பவர்கள் தொடர்ந்து 6 மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வர திருமணத் தடை அகலும். கிருத்திகை விரதமிருந்து சென்னை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட்டால் அவர்களுடைய எண்ணம் நிறைவேறும். புகழின் உச்சிக்குச் செல்வார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வறிய நிலையுள்ள ஆடு அல்லது மாடு வளர்ப்பவர்களின் தேவையறிந்து இயன்ற உதவி செய்ய வேண்டும்.
27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் உச்சமாகும் கிரகம் சந்திரன். நீச்சமாகும் கிரகம் கேதுவாகும். இதன் உருவம் தேர், வண்டி. இதன் அதிதேவதை கிருஷ்ணர். இந்த நட்சத்திர அதிபதி சந்திரன். வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் கண் பார்வை குறைபாடுகள் அகலும். முகம் பொலிவாகவும், வசீகரமாகவும் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை, கிருஷ்ணரை வழிபட வறுமை, தரித்திரம், பசிப்பிணி அகன்று செல்வச் செழிப்பு உண்டாகும்.
ஜென்ம நட்சத்திர நாளில் அஷ்ட லட்சுமியை வழிபட வாழ்நாள் முழுவதும் வெற்றிமேல் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் மிருகசீரிஷம். இது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரம். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும் மூன்று, நான்காம் பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளது. மிருகம் என்றால் விலங்கு. சிரிஷம் என்றால் தலை என்றும் பொருள்படும். இந்த நட்சத்திரத்தின் உருவம் மானின் தலையைப் போல் தோற்றமளிப்பதால் மிருகசீரிஷம் என்ற ழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் முருகனை வணங்கி சிகிச்சை துவங்கினால் வியாதிகள் தீரும். குறிப்பாக காது சிகிச்சை செய்பவர்கள் காது கேளாதவர்கள் இந்த நாளில் சிகிச்சை துவங்கலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குரு ராக வேந்திர சுவாமிகள் மற்றும் நரசிம்மரை வழிபட மேன்மை உண்டாகும். மேலும் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்குவதில் தடை இருப்பவர்கள் தொடர்ந்து முன்று மாதம் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து சுவாமிமலை, விராலிமலை முருகனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும்.
27 நட்சத்திரங்களில் 6 வது நட்சத்திரம் திருவாதிரை. கால புருஷ மூன்றாம் ராசியான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளது. இதன் அதிபதி ராகு. இதன் அதி தேவதை சிவன். இதன் உருவம் ரசமணி, பவளமணி என்று கூறப்படுகிறது. நடனம் என்றாலே தில்லை கூத்தன் நடராஜன். முதன் முதலாக நடன அரங்கேற்றம் செய்பவர்கள் திருவாதிரையில் செய்தால் மென்மேலும் வளர்ச்சி அடையலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்தால் விரும்பியதை அடையலாம்.
பைரவர் வழிபாட்டை திருவாதிரை நட்சத்திரத்தில் துவங்கினால் காரிய சித்தி உண்டாகி பிரார்த்தனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். திருவாதிரையில் நோய்வாய்ப்பட்டால் எளிதில் குணமாகாது. காரணம் கண்டுபிடிக்க முடியாத எந்த நோயானாலும், குணப்படுத்த முடியாத எந்த நோயாக இருந்தாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்ட பிறகு சிகிச்சை துவங்க வேண்டும். அன்று ருத்ர சாந்தி செய்ய படிப்படியாக நோய் தாக்கம் குறையும். பேய், .பிசாசு ஆவிகள் தொல்லை இருப்பவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவாலங்காடு போன்ற சிவ தலங்களுக்கு சென்று சிவனை வழிபட பேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜரை வழிபட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.
தொடரும்....
(மீதம் உள்ள நட்சத்திரங்களுக்கான பரிகாரங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்).