வழிபாடு

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் சிரசு வீதி உலா

கெங்கையம்மன் உற்சவருடன் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.இன்று அம்மன் சிரசு ஏற்ற விஸ்வரூப காட்சியும் நடைபெற உள்ளது.

மாலை மலர்

விஜயராகவபுரம் முதல் தெரு, இரண்டாவது தெரு வழியாக நேதாஜி நகர், மந்தைவெளி ரோடு போன்ற பகுதிகளுக்கு சென்ற தேர் பின்னர் மீண்டும் கோவிலை அடைந்தது. மாலையில் கச்சேரி, பக்தர்களின் கொக்கலிக்கட்டை நடனம், புலிவேடம், சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் சிரசு ஏற்ற விஸ்வரூப காட்சியும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை சத்துவாச்சாரி முத்தரையர் சமுதாய நிர்வாகிகள், கோவில் ஆலோசகர்கள், நிர்வாகிகள், காப்பாளர்கள், நகர இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.