தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
நேற்று பவுர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஏராளமானவர்கள் இரவு கடற்கரையில் தங்கி தீபமேற்றி நிலவை வழிபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் பள்ளிகள் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட சற்று ஏராளமான பக்தர்கள் கடற்கரை, கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
வழக்கம் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷே கமும் நடைபெற்றது. நகர் பகுதியில் பக்தர்கள் வாகன மிகுதியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் வாகனங்கள் வருகை மிகுதியால் திருச்செந்தூர் பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் வெளியே வர பல மணி நேரம் ஆகியது. இதனால் அவசர தேவைக்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.