பொதுவாக மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றனர். சாஸ்திரப்படி, ஓராண்டில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய 96 முக்கியமான தர்ப்பணங்கள் ‘ஷண்ணாவதி தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகின்றன.
இதில் 12 மாத அமாவாசை தர்ப்பணம், 12 தமிழ் மாதப் பிறப்பு தர்ப்பணம், 12 பவுர்ணமி, 16 மகாளய பட்சம் (புரட்டாசி மாதத்தில் வரும் 16 நாட்கள்), கிரகண காலங்கள், தை, மாசி, பங்குனி, புரட்டாசி மாதங்களில் வரும் அஷ்டமி நாட்கள், மற்றும் யுகாதி நாட்கள் போன்றவை அடங்கும். இந்த 96 தர்ப்பணங்களும் நம் முன்னோர்களை வணங்கி, அவர்களின் ஆசி பெற வழிவகுக்கின்றன.
முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி நலம் பெறவும் இந்த 96 தர்ப்பணங்களைச் செய்வது சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு தமிழ் வருடத்திலாவது அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். 21 முன் தலைமுறை 21 பின் தலைமுறைக்கு நாம் வைக்கும் சொத்து இதுதான். பொதுவாக ஒவ்வொரு அமாவாசை மற்றும் தமிழ் மாத பிறப்பு தினத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்துக்கு மாலை அணிவித்து, படையல் வைத்து, தர்ப்பணம் கொடுத்து 4 பேருக்கு உணவு தானம் கொடுப்பதால் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும்.
இதனால் பரம்பரைக்கே மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் அதோடு, வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் நீங்கி நன்மையும், சந்தோஷமும் பெற முடியும்.