வழிபாடு

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி மிதுன லக்னத்தில் காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.

பின்னர் காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT