வழிபாடு

புவனேஸ்வரி ஜெயந்தி வழிபாடு

ஒன்றிலே கருணைமிகு தாயானவள் மிக அன்போடும் உருக்கத்தோடும் நமக்கு வேண்டியன எல்லாம் அள்ளி அள்ளி தருவாள்

நாளை புவனேஸ்வரி ஜெயந்தி. அன்னையின் 10 வடிவங்களில் 4-வது வடிவம் புவனேஸ்வரி தாய். இவள் ஈரேழு உலகிற்கும் அதிபதியாக அதன் இயக்கு சக்தியாக, ஆதார சக்தியாக அறியப்படுகின்றாள், எல்லா உலகுக்கும் ஆதாரம் இவளே.

புவனேஸ்வரி

புவனம் என்றால் உலகம், அதை இயக்குபவள் புவனேஸ்வரி. இந்த அன்னை அப்படி எல்லா உலகங்களுக்கும் தாயாக நிற்கின்றாள், இயக்கு சக்தியாக ஆதாரமாக நிற்கின்றாள். அவளுக்கு நன்றி கூறி வழிபடும் நாள் இது, மறக்காமல் அவளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள். வேறு எல்லாமும் அவளே தருவாள்.

“ஓம் நாராயண்யை வித்மஹே, புவனேச்வர்யை தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத்”

எனும் அவள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள், அப்படியே 108 முறை “ஓம் புவனேஸ்வர்யை நம” எனச் சொல்லி அவளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள். அந்த ஒன்றிலே கருணைமிகு தாயானவள் மிக அன்போடும் உருக்கத்தோடும் நமக்கு வேண்டியன எல்லாம் அள்ளி அள்ளி தருவாள்.

SCROLL FOR NEXT