பரமத்திவேலூரில் பகவதியம்மன் கோவில் சுத்து பொங்கல் விழா 
வழிபாடு

பரமத்திவேலூரில் பகவதியம்மன் கோவில் சுத்து பொங்கல் விழா

பரமத்திவேலூரில் உள்ள பகவதியம்மன் கோவிலில் சுத்து பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.

மாலை மலர்

பின்னர் மாலை அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பகவதியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.