வழிபாடு

சனிதோஷத்தை நீக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன்

பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

பத்ரகாளியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.

ஆடி மாதம்

இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.

ஆஞ்சநேயர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும். சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

சனிதோஷம்

சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும். மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

மாவிளக்கு வழிபாடு

ஆடி மாதம் தொடங்கி விட்டதால், அம்மன் கோவில்கள் தினமும் திருவிழா போல் களைக்கட்டும். ஆடி மாதத்தில் நாம் எந்த அளவிற்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் நம்முடைய குல தெய்வத்தையும் வழிபட வேண்டும். இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் தான் நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு பெருகும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

குல தெய்வம்

அதிலும் குறிப்பாக நாம் நம் குல தெய்வங்களுக்கு மாவிளக்கு செய்து வழிபாடு நடத்த வேண்டும். எனவே, மாவிளக்கு வழிபாடு செய்வது எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். மாவிளக்கு செய்ய முதலில் கால் கிலோ பச்சரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்.

தீபம்

பின் அதனை ஒரு உருண்டை போல் உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், உருண்டையின் நடுவில் ஒரு குழி தோண்டி கொள்ள வேண்டும். பின் அதை அம்மன் சந்நிதியில் நேராக வைக்க வேண்டும். மாவு உருண்டைகளின் நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு வைக்கவேண்டும். பின் குழியில், நெய் ஊற்றி திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். மேலும் மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ வைத்திருக்கும் இடத்தில், வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழத்தை வைக்க வேண்டும். அதுபோல் ஒரு தேங்காயை உடைத்து இரு புறமும் வைக்க வேண்டும்.

திருமண தடைகள்

விளக்கு திரி நன்கு எரிந்து முடித்த பின் அந்த திரியை கோவிலுக்கு எடுத்து சென்று அங்கு இருக்கும் விளக்குகள் ஏதாவது ஒன்றில் அணையாத படி வைக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் உங்கள் குல தெய்வத்திற்கு மாவிளக்கு செய்து வழிபட்டால் உங்களைத் தேடி பல நன்மைகள் வரும். அதுபோல் உங்களுக்கோ அல்லது வீட்டில் யாராவது ஒருவருக்கோ திருமண தடைகள் இருந்தால் அவையும் நீங்கும், மேலும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும், புகழும் கிடைக்கும்.