வழிபாடு

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதத்தை தொடங்கினர்.

திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் மாலை அணிவதற்காக அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதத்தை தொடங்கினர்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன்கோவில், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், கே.கே.நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலையே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

சுவாமியே சரணம் ஐய்யப்பா

அவர்களுக்கு குருசாமி துளசி மாலை அணிவித்தார். பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” உள்ளிட்ட சரண கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் தங்களது விரதத்தை தொடங்கினர். இதில் சிறுவர்கள், சிறுமிகளும் மாலை அணிந்தனர்.

திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் மாலை அணிவதற்காக அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் விரதம்

ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியதையொட்டி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சந்தனம், ருத்ராட்சம் மற்றும் துளசி மாலை, காவி, நீலம், கருப்பு நிறத்திலான வேட்டி, துண்டு விற்பனை அதிக அளவில் இருந்தது.

கடைகளிலும் பூ, பழம் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT