வழிபாடு

சித்திரை மாத அமாவாசை- ராமேஸ்வரம் செல்வோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

அமாவாசை திதி முதல் நாள் இரவே துவங்கி விடுவதால் காலை பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயம் ஆகும்

ராமேஸ்வரத்தில் முன்னோருக்கு திதி கொடுப்பவர்கள் முதலாவதாக, அக்னி தீர்த்தம் என்று சொல்லப்படும் ராமேஸ்வரம் கடற்கரையில் நீராடி திதி காரியம் அல்லது, தர்ப்பணம் ஆகியவற்றை செய்து முடிக்க வேண்டும்.

இந்த பித்ரு காரியத்தை செய்து முடிக்காமல் கோவிலுக்கு செல்லக்கூடாது அல்லது கோவிலுக்கு சென்று வந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீண்டும் அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பிறகு ஆடைகளை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

ராமேஸ்வரத்திற்கு சித்திரை மாத அமாவாசை அன்று தர்ப்பணம் செய்பவர்கள் அதை முடித்து நீராடி இறைவனை தரிசித்த பிறகு நேரடியாக வீட்டுக்கு திரும்ப வேண்டும்.

அமாவாசை திதி முதல் நாள் இரவே துவங்கி விடுவதால் காலை பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயம் ஆகும் முன்பே சித்தர்களுக்கான தர்ப்பணம் செய்வது உகந்தது. அதற்குப் பிறகு கூட்டம் அதிகரிக்கும் என்பது குறிபிடத்தக்கது.