வழிபாடு

கள்ளழகர் கோவில் வசந்த உற்சவ விழா நாளை தொடங்குகிறது

திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. இந்த விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.

மாலை மலர்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாதம் வசந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வு நடைபெறும், இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் சகல பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும்.

தொடர்ந்து விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.. இந்த விழாவில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள ஆடி வீதிகள், வழியாக, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.